மணிப்பூரில் வெடித்தது கலவரம்-இருவர் பலி-பலர் காயம்..!

மணிப்பூர் மாநிலம் சுரசந்த்பூர் மாவட்டத்தில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

தலைமை காவலராக சியாம்லால்பால் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த போராட்டம் முற்றியதில் தற்போது அது வன்முறையாக மாறியுள்ளது. இதனால் தற்போது இருவர் உயிரிழந்ததுடன் 25 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் வாயிலாக அறிய முடிகின்றது.

மேலும், அரச அலுவலகத்திற்கு வெளியே இருந்த பேருந்துகள் மற்றும் பல்வேறு பொருட்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர். கல்வீசி தாக்கல் நடத்தியுள்ளனர். பொலிஸார் அதற்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

இதனால் போராட்டம் வன்முறையாக மாறியது.

தலைமை காவலர் சியாம்லால்பால் ஆயுதம் ஏந்திய குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும கிராம பாதுகாப்பு தன்னார்வலர்களுடன் சேர்ந்த செல்பி எடுத்துள்ளமையானது தற்போது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகியுள்ளது.