மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து  ஆலயங்களிலும் திருநீற்றுப் புதன் திருப்பலி..!{படங்கள்}

மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து  ஆலயங்களிலும் திருநீற்றுப் புதன் திருப்பலி  இன்று புதன் கிழமை (14) காலை பங்குத்தந்தையர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் காலை 6.30 மணிக்கு பங்குத்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.

இதன் போது பங்கு மக்கள்,பாடசாலை மாணவர்கள்,அருட்சகோதரிகள் என பலரும் திருப்பலியில் கலந்து கொண்டனர்.

கிறிஸ்தவர்களின் புனித நாள் களில் ஒன்றான திருநீற்றுப் புதன் தினம் இன்றாகும்.இன்று முதல் கிறிஸ்தவர்களின் புனித புண்ணிய தவக்காலம் ஆரம்பமாகிறது.
இத் தவக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை அனுஸ்டிக்கப்படும்.மார்ச் மாதம் 29 ஆம் திகதி புனித பெரிய வெள்ளி அனுஷ்டிக்கப்பட உள்ளது.
அன்று இயேசு கிறிஸ்து பாடுபட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்ட நாளாகும். இதனை ஒட்டியதாக இன்று முதல் நாற்பது நாட்கள் புனித
தவக் காலமாக இயேசு பிரான் அனுபவித்த பாடுகள்,  மரணம், உயிர்ப்பு ஆகிய மூன்றும் நினைவு கூரப்படும்.
மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து  ஆலயங்களிலும் திருநீற்றுப் புதன் திருப்பலி..!{படங்கள்}-oneindia news மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து  ஆலயங்களிலும் திருநீற்றுப் புதன் திருப்பலி..!{படங்கள்}-oneindia news மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து  ஆலயங்களிலும் திருநீற்றுப் புதன் திருப்பலி..!{படங்கள்}-oneindia news மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து  ஆலயங்களிலும் திருநீற்றுப் புதன் திருப்பலி..!{படங்கள்}-oneindia news