மரணத்திலும் இணை பிரியா தம்பதியினர்-முன்னாள் பிரதமர் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

மரணம் நம்மை பிரிக்கும் வரை இணைபிரியா தம்பதிகளாக வாழ வேண்டுமென்பது பலரது எதிர்பார்ப்பு.

ஆனால், முன்னாள் நெதர்லாந்து பிரதமர் ட்ரைஸ் வான் ஆக்ட் (Dries van Agt) மற்றும் அவரது மனைவி யூஜெனி (Eugenie) ஆகியோருக்கு கடந்த ஏழு தசாப்தங்களாக ஒன்றாக கழித்ததை போலவே ஒன்றாக இந்த வாழ்க்கையில் இருந்து விடைபெறுவது நோக்கமாக இருந்துள்ளது.

இதன்படி, 93 வயதான இந்த தம்பதி இந்த மாதம் முதல் பகுதியில் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இருவரும் கைகோர்த்து இறந்ததாக ரைட்ஸ் ஃபோரம் அமைப்பு தெரிவித்துள்ளது.

பழமைவாதம் வேரூன்றிய பழம்பெரும் அரசியல்வாதியான ட்ரைஸ் வான் ஆக்ட் பல்வேறு தாராளவாத காரணங்களுக்காக பிரசாரம் செய்தவர்.

ட்ரைஸ் வான் ஆக்ட் 1977 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரை நெதர்லாந்தின் பிரதமராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்காவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் ட்ரைஸ் வான் ஆக்ட் 2019 ஆம் ஆண்டில் மூளையில் இரத்தக்கசிவால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் முழுமையாக குணமடையவில்லை.

இந்த நிலையில், ட்ரைஸ் வான் ஆக்ட் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் சிரமத்திற்குள்ளாகியுள்ளார். இந்த நிலையிலே, ட்ரைஸ் வான் ஆக்ட் மற்றும் அவரது மனைவி கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கருணைக்கொலை பல நாடுகளில் தடை செய்யப்பட விடயமாக இல்லாதபோதும் இன்றும் சர்ச்சைக்குரிய விடயமாகவே இருக்கின்றது.

நெதர்லாந்தைப் பொறுத்தவரை தெளிவாக வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளுடன் 2002 ஆம் ஆண்டு முதல் கருணைக்கொலை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது.

இருப்பினும், ட்ரைஸ் வான் ஆக்ட் மற்றும் அவரது மனைவி யூஜெனி ஆகியோரின் இறப்பைத் தொடர்ந்து கருணைக்கொலை குறித்து மீண்டும் கவனம் செலுத்தப்படுகிறது.

நெதர்லாந்தில் 2020 ஆம் ஆண்டில் 26 பேர் ஒரே நேரத்தில் கருணைக்கொலை செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், 2021 ஆம் ஆண்டு 32 பேர் கருணைக்கொலை செய்யப்பட்டதுடன், 2022 ஆம் ஆண்டில் கருணைக்கொலையை தேர்ந்தெடுத்த தளபதிகளின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, ஆண்டுதோறும் 1000 பேர் கருணைக்கொலை செய்யப்படுவதாக தெரிவிக்கபப்டுகிறது.