மற்றுமொரு கோர விபத்து-இளைஞன் பலி..!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹதுவேகம உக்கல்பட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார்.

நேற்று (14) இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த இளைஞன் தனது வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்த கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது செங்குத்தான வீதியிலுள்ள மின்கம்பத்தில் மோதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளை செலுத்தியவருக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 25 வயதான கிஹான் மதுசங்க லக்மால் என்ற திருமணமானவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்