மலையகத்தில் ரயில் மோதி ஒருவர் பலி..!

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அஸ்கிரிய பிரதேசத்தில் ரயிலில் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

75 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.