Home உலகம் மாணவரை கொன்ற ஆடவருக்கு விச ஊசியால் மரண தண்டனை

மாணவரை கொன்ற ஆடவருக்கு விச ஊசியால் மரண தண்டனை

36அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சுற்றுலா சென்றிருந்த ஆடவர் ஒருவரை கொன்று அவரது சகோதரியை கற்பழித்த குற்றச்சாட்டில் ஆடவர் ஒருவர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ரெயின்போர்ட் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் (29) மாலை 57 வயதான லோரன் கோல் என்பவருக்கு விச ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக புளோரிடா திருத்தங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒகாலா தேசிய வனத்தில் தனது சகோதரியுடன் சுற்றுலா சென்றிருந்த புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் 18 வயது மாணவனை 1994 ஆம் ஆண்டு கொலை செய்ததற்காக கோலுக்கு 1995 டிசம்பரில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. கொல்லப்பட்டவரின் மூத்த சகோதரி மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் குற்றங்காணப்பட்டார். அந்தப் பெண் மரம் ஒன்றில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரால் மறுதின தப்பிச் செல்ல முடிந்துள்ளது.

இந்த சம்பவத்தில் கோலின் கூட்டாளியான வில்லியம் போல் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Exit mobile version