அறுகம்பை பகுதியில் மாலைதீவு பிரஜை உட்பட ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுகம்பை பகுதியில் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் கொழும்பில் முக்கிய நிதித் தளங்களை புகைப்படம் எடுத்த சம்பவங்கள் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த சந்தே கநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளாதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட மாலைதீவு பிரஜை ஒருவர் மற்றும் ஐந்து இலங்கையரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், இது என்ன வகையான திட்டம் அல்லது முயற்சி என்று தங்களால் இன்னும் உறுதியாக கூற முடியாது.
கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி அப்படி ஒரு முடிவுக்கு வர முடியாது உள்ளது. எனவே, அதனால் தேவையற்ற தவறான விளக்கங்களை தவிர்ப்பது சிறந்தது என்றார்.