மின்கட்டண திருத்தம்-மக்களின் கருத்துக்கள்-சற்று முன் வெளியான தகவல்..!

இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ள பொது ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் மின்சார கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை (15) முதல்பொது மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பொது மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதன் பின்னர் ஆணைக்குழு ஒன்றுகூடி கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற இலாபம் மற்றும் நீர் மின் உற்பத்தியினை கருத்தில் கொண்டு கட்டண திருத்தம் குறித்தது முன்மொழியுமார் இலங்கை மின்சார சபைக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின்சார கட்டணத்தை 3.34 வீதத்தினால் குறைப்பதற்கு கடந்த 16 ஆம் திகதி இலங்கை மின்சார சபை பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட விநியோகச் செலவை மிகைப்படுத்தப்பட்ட செலவாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கருத்தியுள்ளது