முல்லையில் பயங்கரம்!! இளம் மனைவியை கொலைசெய்து புதைத்து விட்டு தலைமறைவான கணவர்

முல்லையில் பயங்கரம்!! இளம் மனைவியை கொலைசெய்து புதைத்து விட்டு தலைமறைவான கணவர்

முல்லைத்தீவு நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீராவிபிட்டி கிழக்கு பகுதியில் சில நாட்களாக வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று தங்கி வந்த இளம்குடும்ப பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டு வீட்டின் பின்பாகவுள்ள மலசலகூடத்திற்கு அருகே குழி தோண்டி புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த த.கீதா எனும் 23 வயதுடைய குடும்ப பெண் முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த 23வயதுடைய ஆணொருவரை திருமணம் முடித்து நீராவிபிட்டி கிழக்கு பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரமாக வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேகத்தின் பேரில் தனது இளம் (22) மனைவியை கொலைசெய்து புதைத்து விட்டு தலைமறைவாவன கணவன் (23) வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து முள்ளியவளை பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையில் குறித்த பெண் படுகொலை செய்யப்பட்டதற்கான காரணத்தினை முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி K.சங்கீத் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற அகழ்வுப் பணியின் போது சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ, தடயவியல் பொலிசார் விஷேட அதிரடி படையினர், பொலிஸார் ஆகியோர்பிரசன்னமாகியிருந்தனர்.

குறித்த இளம் குடும்ப பெண் தொலைபேசியில் தனது தாயாரிடம் நாளாந்தம் உரையாடுவதாகவும் கடந்த 21ம் திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி துண்டிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் (23) மகளும் மருமகனும் வசிக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்படுவதாகவும் இதனால் சந்தேகம் அடைந்த குறித்த பெண்ணின் தாயாரால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WipeOut37 24 2023 093730.167000

முல்லையில் பயங்கரம்!! இளம் மனைவியை கொலைசெய்து புதைத்து விட்டு தலைமறைவான கணவர்
முல்லையில் பயங்கரம்!! இளம் மனைவியை கொலை செய்து புதைத்து விட்டு தலைமறைவான கணவர்

02
01
WhatsApp Image 2023 10 24 at 20.13.04

https://jaffna7.com/%e0percentaepercentaepercente0percentafpercent81percente0percentaepercentb2percente0percentafpercent8dpercente0percentaepercentb2percente0percentafpercent88percente0percentaepercenta4percente0percentafpercent8dpercente0percentaepercenta4percente0percentafpercent80percente0percentaepercentb5percente0percentaepercentbfpercente0percentaepercentb2percente0percentafpercent8d-%e0percentaepercent87percente0percentaepercentb3percente0percentaepercentaepercente0percentafpercent8d-%e0percentaepercent95percente0percentafpercent81percente0percentaepercent9fpercente0percentafpercent81/