மோட்டார் சைக்கிள் மோதி மாணவன் பலி

மித்தெனிய – வலஸ்முல்ல பிரதான வீதியில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவன் தனது 2 நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் வீதிக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த ஏனைய இருவரும் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்