யாழிலிருந்து பயணித்த தனியார் பேருந்து விபத்து: இருவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்தொன்று விபத்திற்கு இலக்காகியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் குருணாகல் தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல பெலிகமுவ பிரதேசத்தில் இன்றைய தினம் (24.09.2023) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த தனியார் பேருந்தும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழிலிருந்து பயணித்த தனியார் பேருந்து விபத்து: இருவர் பலி

விபத்தில் காயமடைந்தவர்கள் ஆராச்சிக்கட்டுவ பகுதியைச் சேர்ந்த குழுவினர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இருவரின் சடலங்கள் கலேவெல பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த பெண் ஒருவரும் மற்றுமோர் ஆண் மற்றும் 6 வயது சிறுவன் ஒருவரும் கலேவெல வைத்தியசாலையில் இருந்து தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

யாழிலிருந்து பயணித்த தனியார் பேருந்து விபத்து: இருவர் பலி - Tamilwin News யாழிலிருந்து பயணித்த தனியார் பேருந்து விபத்து: இருவர் பலி - Tamilwin News யாழிலிருந்து பயணித்த தனியார் பேருந்து விபத்து: இருவர் பலி - Tamilwin News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here