யாழ் இருபாலைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை விஞ்ஞான பாட ஆசிரியர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இரு மாணவர்களுக்கிடையில் புத்தகப் பை தொடர்பில் இழுபறி ஏற்பட்டதாகவும் ஒரு மாணவனை அழைத்த ஆசிரியர் தாறுமாகத் தடியாலும் கைகளாலும் தாக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் போலீசார் குறித்த ஆசிரியரை கைது செய்ததுடன் அவரை நீதிமன்றத்திற்கு செல்லப்படாது பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அறிய கிடைத்துள்ளது.