Home JAFFNA NEWS யாழில் மீண்டும் அதிகரிக்கும் சோதனை சாவடிகள்: மக்கள் விசனம்

யாழில் மீண்டும் அதிகரிக்கும் சோதனை சாவடிகள்: மக்கள் விசனம்

404
0

யாழ்ப்பாணத்தில் மீண்டும் திடீரென சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்டபின்னர் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளமை அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

போர் முடிவுற்ற பின்னர் சோதனைச் சாவடிகளை அகற்றுமாறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.

இந்நிலையில் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்ற பின்னர் இங்கு இருந்த பல சோதனைச் சாவடிகள் உடனடியாக அகற்றப்பட்டன. எனினும், அந்தச் சோதனைச் சாவடிகள் தற்போது மீண்டும் அதே இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

இது மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அநுர அரசு சோதனைச் சாவடிகளைத் தாமே அகற்றுவதும் மீண்டும் தாமே அமைப்பதுமான இந்த நடவடிக்கை தொடர்பில் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, நீண்ட காலமாகப் பருத்தித்துறையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமை அகற்றுவதாக அநுர அரசு உறுதியளித்திருந்த போதிலும் இதுவரையில் அது அகற்றப்படாமலே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here