லேக் ஹவுஸ் புதிய தலைவராக காமினி வருஷமான நியமனம்

லேக் ஹவுஸ் (ANCL) நிறுவனத்தின் புதிய தலைவராக காமினி வருஷமான இன்று பதவியேற்றார்.

அவர் களனிப் பல்கலைக்கழக பட்டதாரியாவார்.

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சண்டே ஒப்சர்வர் பத்திரிகையின் ஊடகவியலாளராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த அவர், பல்வேறு நிறுவனங்களில் ஆய்வாளராக பணியாற்றியுள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தில் வெகுஜன தொடர்பாடலில் முதுமாணிப் பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.