வந்தாறுமூலை வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி.!

மட்டக்களப்பு- வந்தாறுமூலை பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

இவரை மோதிய உழவு இயந்திரம் மற்றும் சாரதியும் தலை மறைவாகியுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவரை பின்னால் வந்த உழவு இயந்திரம் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வந்தாறுமூலைப் பிரதேசத்தைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய கனேசநாதன் ரகுநாதன் என்பவரே மரணித்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

36 வயதுடைய இவர் சுமார் 15 வருடங்கள் மத்திய கிழக்கு நாட்டில் தொழிலாளியாகப் பணியாற்றிவிட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே நாடு திரும்பியுள்ளார்.

திடீர் மரணவிசாரணையதிகாரி முகம்மது நசீர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டிருந்த சடலத்தைப் பார்வையிட்டு முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தார்.

இதையடுத்து உடல் கூறுபரிசோதனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடாத்தப்பட்டது.

ஏறாவூர் பொலிஸார் உழவு சாரதியை தேடுவதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.