அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்குரஸ்ஸ சியம்பலாகொட – பிடபெத்தர வீதியில் போபகொட சந்திக்கு அருகில் புதன்கிழமை (26) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கணவருடன் சென்ற ஆசிரியை
பிடபெத்தரை, மெதிரிபிட்டிய பாடசாலையில் கிடைத்த பரிசில்களுடன் மோட்டார் சைக்கிளில் மகதுரையில் உள்ள தமது வீட்டை நோக்கி கணவருடன் பயணித்துள்ளனர்.
இதன்போது பிடபெத்தரவை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தனது சொகுசு வேனில் அக்குரஸ்ஸ பகுதியிலிருந்து பிடபெத்தரை நோக்கி பயணித்த போது விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மகடூர பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான பாக்யா பொரலஸ்ஸ மற்றும் அவரது கணவர் இந்திக்க சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய வர்த்தக சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.