வியட்நாமில் நிலநடுக்கம்

வியட்நாமின் மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தும் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கங்கள் முறையே 4.0, 3.3, 2.8, 2.5, மற்றும் 3.7 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன்
வியட்நாமின் மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தும் பகுதியில் ஒரு மணிநேரத்திற்குள் தொடர்ந்து 5 முறை பதிவாகிய அதிர்வினால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்துள்ளதுடன், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.