விளையாட்டு வினையானது ; திருமலையில் இரு கைதிகள் சாவு

இரு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கிச்சு கிச்சு மூட்டி விளையாடிய சம்பவம் தீவிரமடைந்து அது கொலையில் முடிந்துள்ளது.

திருகோணமலை சிறைச்சாலையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் கிச்சுக் கிச்சு மூட்டி விளையாடிக்கொண்டிருக்கும்போது கோபத்தில் ஒரு கைதி மற்ற கைதியை தூக்கி தரையில் அடித்தமையால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான கைதி தலையில் அடிபட்டு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் திருகோணமலை கிண்ணியா மஹரூப் நகரைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்