விவசாயிகளின் அனைத்து விவசாயக் கடன்களும் இரத்து

விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக பெற்ற அனைத்துச் பயிர்ச்செய்கைகளுக்கமான கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

பல்வேறு விவசாய சங்கங்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிதி நிவாரணத்தையும், அவர்களுக்கு ஆதரவையும் வழங்கும் நோக்கில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.