வீதிக்கு வந்து பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்

மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/கள்ளியடி பாடசாலையில் தொடர்ச்சியாக மூன்று ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளமை மற்றும் கள்ளியடி பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்தமை ஆகியவற்றை கண்டித்து பாடசாலை மாணவர்கள் , பெற்றோர் ,கிராம மக்கள் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர்

இன்றைய தினம் (7) காலை பாடசாலைக்கு முன் குறித்த போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.வீதிக்கு வந்து பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்-oneindia newsதற்பொழுது பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இன்றி கள்ளியடி பாடசாலையில் மாணவர்கள் கல்வியை தொடர்வதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகிறது.

இதற்குக் காரணம் மடு வலய கல்விப் பணிப்பாளரின் நடவடிக்கை என போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் தெரிவித்துள்ளனர்.வீதிக்கு வந்து பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்-oneindia newsமேலும், போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்ப பிரிவு மாணவர்கள் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.