வேலன் சுவாமிகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரல்

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுக்க வந்த வேலன் சுவாமிகள் மனம் நொந்தமைக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்றையதினம் (07.02.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“சில கட்சிகள் பிரதேசவாதத்தை கையாண்டாலும் தமிழ்த்தேசிய பாதையில் பயணிக்கும் கட்சியான இலங்கைத் தமிழரசு கட்சி வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.

மேலும், தமிழர் போராட்டத்துக்கு ஆதரவு தருபவர்களை நாம் கௌரவப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.