இன்றைய ராசிபலன் : 1 செப்டம்பர் 2024 – Horoscope Today
Today Horoscope இன்றைய ராசி பலனை (செப்டம்பர் 1, 2024 ஞாயிற்று கிழமை) இன்று சந்திரன் பகவான் கடக ராசியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று தனுசு ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.
இன்றைய ராசிபலன் : 1 செப்டம்பர் 2024 – Horoscope Today
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 1, 2024, குரோதி வருடம் ஆவணி 16, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள சேர்ந்த பூராடம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமற்ற நாளாக இருக்கும். பிறரால் தொல்லைகள் அனுபவிக்க நேரிடலாம். வியாபாரம் தொடர்பான விஷயத்தில் கவலைகள் ஏற்படும். உங்கள் வேலைகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. கடினமான நேரத்தில் வாழ்க்கைத் துணையின் மூலம் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்களின் நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க முடியும். உங்களின் அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்தவும். இன்று அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய சிரமம் ஏற்படும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று திருப்தி ஏற்படும். தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் திருமணம் தொடர்பான தடைகள் நீங்கும். திருமண வரன் அமைய வாய்ப்புள்ளது. அரசாங்க வேலை தொடர்பான நல்ல செய்தி தேடி வரும். அரசியலில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கவனமாக செயல்பட வேண்டிய நாள். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயத்தில் செலவுகள் ஏற்படலாம். வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. இன்று உங்களின் மதிப்பு மிக்க பொருட்கள் மீது கவனம் செலுத்தவும். காதல் வாழ்க்கையில் புரிதல் சிறப்பாக இருக்கும். இன்று பணப்பரிவர்த்தனை செய்வதில் கூடுதல் கவனம் தேவை. பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்தி கேட்பீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் கௌரவம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கடினமான உழைப்பு தேவைப்படும். இன்று பெரிய பணவரவு எதிர்பார்க்கலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் லட்சியங்களை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் உள்ள சிக்கல்களை சமாளிக்க துணையின் ஆலோசனை உதவும். முன்னேற்றம் நிறைந்த நாள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்கள் செயலிலும், பேசியிலும் கவனம் தேவை. உங்களின் மதிப்பை காத்துக் கொள்ளவும். உங்கள் வேலையை முடிப்பதில் அலைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் விளையாட்டுப் போட்டி, தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும். பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கேட்க முடியும். உங்கள் தொழிலில் சிக்கல்களைத் தாண்டி நம்மை அடைவீர்கள். இன்று ஆன்மீக நிகழ்வுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். சகோதரர்கள் விஷயத்தில் இணக்கமான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று இனிமையான நாளாக அமையும். அரசியலில் உள்ளவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். உங்களின் பழைய கடனை அடைத்து நிம்மதி அடைவீர்கள். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். உங்களின் உங்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். பங்குச் சந்தை தொடர்பான முதலீடு தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை.புதிய வியாபாரம், தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெறலாம். சொத்து தொடர்பான தகராறுகள் தீர அமைதி பேச்சு வார்த்தையை அவசியம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எதிரிகள் மூலம் உங்கள் வேலையில் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் புதிய திட்டங்கள், செயல்பாடுகள் மூலம் லாபம் அடையக்கூடிய விஷயங்கள் நடக்கும். இன்று பண விஷயத்தில் கவனம் தேவை. செலவுகளை கட்டுப்படுத்தவும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று . குடும்ப பொறுப்புக்கள் மற்றும் நிதி விஷயங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் ஏமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. கல்வி தொடர்பான விஷயத்தில் வெற்றி நிச்சயம். உங்கள் வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சுமாரான பலம் தரக்கூடிய நாளாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் மன வருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று எதிர்காலம் தொடர்பான கவலைகள் ஏற்படும். குடும்பம் தொடர்பாக பாதகமான சூழல் ஏற்படலாம். காதலுக்காக நேரத்தை செலவிட முடியாமல் போகலாம். இன்று உங்களின் பேச்சு, செயலில் கூடுதல் கவனம் தேவை.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளின் செயல்பாடு கவலை தரும். இன்று தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் எதிர்பார்த்த கடன் கிடைக்காமல் வருந்துவீர்கள். உறவில் விரிசல் ஏற்படலாம். திருமண வாழ்க்கையில் பல நாட்களாக இருந்த தடைகள் நீங்கும். தாயின் அன்பும், ஆதரவையும் பெறுவீர்கள்.