Home Tamil Cinema News எதிர்ப்பை மீறி LOVE பண்ணேன்.. LIFE-ல இந்த கொடுமை யாருக்கும் நடக்க கூடாது.. உடைந்து அழுத...

எதிர்ப்பை மீறி LOVE பண்ணேன்.. LIFE-ல இந்த கொடுமை யாருக்கும் நடக்க கூடாது.. உடைந்து அழுத பிரபுதேவா..!

பிரபல நடனம் இயக்குனர் ஆன பிரபுதேவா தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் நடனம் இயக்குனராகவும் இருந்து வருகிறார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார் பிரபுதேவா.

முதன் முதலில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் குரூப் டான்சராக அறிமுகமானார். அதை அடுத்து காதலன் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகினார்.

பிரபு தேவாவின் அறிமுகம்:

தொடர்ந்து லவ் பேர்ட்ஸ் , நாம் இருவர் நமக்கு இருவர், சுயம்வரம் , வானத்தை போல, ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

1995 ஆம் ஆண்டு ரமலத் என்ற தன்னுடைய குழுவில் நடனமாடிய குரூப் டான்சரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

அதை அடுத்த நடிகை நயன்தாராவை ரகசியமாக காதலித்து திருமணம் செய்து கொண்டு பெரும் சர்ச்சையை சந்தித்தார்.

பின்னர் அவரையும் பிரிந்து தற்போது ஹிமானி என்ற மருத்துவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல தொகுப்பாளரான நீயா நானா கோபிநாத்துடன் ஒரு நேர்காணலில் பங்கேற்ற பிரபுதேவா தனது வாழ்வில் நடந்த மிக சுவாரசியமான விஷயங்களை குறித்து மனம் திறந்து பேசினார்.

எதிர்ப்பை மீறி LOVE பண்ணேன்.. LIFE-ல இந்த கொடுமை யாருக்கும் நடக்க கூடாது.. உடைந்து அழுத பிரபுதேவா..!

அப்பாவுக்கு பயம்… எதிர்ப்புகளை மீறிய காதல்:

அப்போது என்னுடைய அப்பா என்றால் எனக்கு இப்பவும் பயம். அவர் போன் பண்ணாவே நான் இப்பவும் எழுந்து நிற்பேன். அந்த அளவுக்கு மரியாதை கலந்த ஒரு பயம் அவர் மீது இப்பவும் இருக்கு என்று கூறினார்.

உடனே அந்த சமயத்தில் காதல் எல்லாம் பண்ண முடியாதா? என கேட்டதற்கு…..இல்லையில்லை அதையும் மீறி பண்ணினேன். அப்படித்தான் எனக்கு முதல் கல்யாணம் காதல் திருமணம் ஆச்சு.

ஆனால், அது சரிப்பட்டு வரல அதன் பிறகு அவர்களை பிரிஞ்சிட்டேன். ஆனால் பசங்க மீது எனக்கு ரொம்ப அளவு கடந்த அன்பு பாசம் இருக்கு.

வாழ்க்கையில ஒரு தப்பு மட்டும் யாருமே பண்ணவே கூடாது. பசங்க மேல ரொம்ப அக்கறையாவும் பாசமாக இருந்திடவே இருந்துடாதீங்க. அது மனுஷனை கொன்னுடும்.

அவங்களுக்கு ஒரு சின்ன விஷயம்னா கூட நம்மளால ஏத்துக்க முடியாது. அவங்கள வளக்கணும், அவங்கள பெரிய ஆள் ஆக்கணும். நல்ல மனுஷங்களா இந்த உலகத்தில் நிலைநிறுத்தணும் என்பதிலே நம்ம மைண்ட் ஃபுல்லா அவங்களையே சுற்றி இருக்கும்.

அதனால நம்ம நம்மளோட வாழ்க்கை ஃப்ரீயா வாழவே முடியாது. எனவே யாரும் பிள்ளைகள் மீது ரொம்ப பாசமாக இருக்கும் அந்த ஒரு தப்பு மட்டும் பண்ணிடாதீங்க .

பிள்ளைங்க மேல பாசமா இருக்காதீங்க:

நானும் ரொம்ப பாசமாக இருக்கக்கூடாதுனு நினைக்கிறேன். ஆனால் அதுல இருந்து என்னால வெளில வர முடியல. அதுதான் மனுஷங்க என்று பிரபுதேவா மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசினார்.

நான் காதல் திருமணம் செய்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அப்படின்னு சொன்னதும் யாருமே நம்பவே இல்ல. இவனா எப்படின்னு எல்லாரும் ஷாக் ஆனாங்க.

ஏன்னா நான் ஒரு அவுட் ஆப் ஜோன்ல இருப்பேன். பெருசா யார்கிட்டயும் பேசிக்க மாட்டேன். ரொம்ப சைலன்ட்.

ஆனால் எனக்குள்ளையும் அப்படி ஒன்று நடந்துச்சா அப்படின்னு என்னோட காதல் விஷயத்தை கேட்டவுடனே எல்லாருமே ஷாக் ஆகிட்டாங்க.

சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் என்கிட்ட மாறாத ஒரு விஷயம் என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா தீபாவளி வந்துருச்சுன்னா அந்த நாள்ல புது டிரஸ் போடறதுக்கு அப்படி ஒரு சந்தோஷமா இருக்கும்.

இப்ப வரைக்கும் கூட தீபாவளி வந்துச்சுன்னா எனக்கு அந்த மகிழ்ச்சி இன்னும் போகவே இல்லை.அந்த நாட்கள் அப்படியே மனசுல இருக்கு என்று சொன்னார்.

எனக்கு பெரிதாக லக்ஸரி வாழ்க்கை வாழ்வதற்கு அவ்வளவாக விருப்பமோ ஆசையோ கிடையாது .

பல கோடி மதிப்புள்ள கார் வச்சுக்கணும், நல்ல பிராண்டான வாட்ச் போடணும் இந்த மாதிரி எல்லாம் எனக்கு பெருசா ஆசை எதுவும் கிடையாது. சின்ன சின்ன விஷயத்திலே என்னோட ஹேப்பினஸ் இருக்கு என்றார்.


இந்த விஷயத்துக்கு நான் ரொம்ப ஹேப்பி ஆகிடுவேன்:

பின்னர் உங்களைப் பற்றி வெளிவந்த சர்ச்சைகளை எப்படி மேற்கொண்டீர்கள்? அந்த சச்சையான விஷயங்களில் இருந்து எப்படி நீங்கள் வெளியில் வந்தீர்கள் என கேட்டதற்கு… இந்த உலகத்தில் யாருமே ரொம்ப நல்லவங்களும் கிடையாது.

யாருமே ரொம்ப மோசமான கெட்டவங்களும் கிடையாது. எல்லாருக்கும் எல்லாமே ஒரு பாடம் தானே. ஆனாலும் அந்த சர்ச்சையான செய்திகள் வரும்போது எல்லாம் நான் அதைப் பற்றி பெரிதாக காது கொடுத்து கூட கேட்க மாட்டேன்.

நான் பாட்டுக்கு என் வேலை உண்டு என்று சென்று விடுவேன். அதனால்தான் அதிலிருந்து வெளியில் வர முடிந்தது என பிரபு தேவா கூறினார்.

அதன் பிறகு தன்னுடைய தம்பியான ராஜூ மாஸ்டரின் நடனம் குறித்து பேசிய பிரபுதேவா என்னைவிட ராஜு மிகவும் ஸ்டைலாக பர்பாமென்ஸ் பண்ணுவார். அதை நிறைய பேரு என்கிட்டயே வந்து சொல்லி இருக்காங்க என்று கூறினார்.

முன்னதாக ராஜூ மாஸ்டர் பேட்டி ஒன்றில்… என்னுடைய அம்மாவுக்கு என்னை காட்டிலும் என்னுடைய அண்ணன் பிரபுதேவாவை தான் ரொம்ப பிடிக்கும்.

தம்பி ராஜு குறித்து பிரபு தேவா:

ஏனென்றால் என்னை காட்டிலும் என்னுடைய அண்ணன் பிரபுதேவா அதிக வருமானம் சம்பாதிக்கிறார்.

பெற்றோர்களுக்கு எப்போதுமே அதிகமாக வருமானம் சம்பாதிக்கும் மற்றும் பொறுப்பாக இருக்கும் பிள்ளைகளை தான் மிகவும் பிடிக்கும் .

அப்படித்தான் என்னை காட்டிலும் என்னுடைய அண்ணன் பிரபுதேவாவை தான் என்னுடைய அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும் என ராஜு மாஸ்டர் முன்னதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக இந்த பேட்டி முழுக்க பிரபுதேவா மிகவும் சாதாரண பக்கத்து வீட்டு மனிதர் போலவே எளிமையாக பேசினார்.

அவரின் இந்த நேர்காணலை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் இந்தியாவே அவரது நடனத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு போகும்.

ஆனால் அவர் ரொம்பவும் சாதாரணமா இவ்வளவு இயல்பாக இருக்கிறாரே என பலரும் அவரது இயல்பான குணத்தை பார்த்து வியந்து பாராட்டி வருகிறார்கள்.

Exit mobile version