Home இலங்கை செய்திகள் தேர்தல் விஞ்ஞாபனம் 2ஆம் திகதி வெளியீடு

தேர்தல் விஞ்ஞாபனம் 2ஆம் திகதி வெளியீடு

சவால்களை முறியடித்து எதிர்கால சந்ததியினரின் நாளைய சகல அம்சங்களிலும் அபிவிருத்தி செய்யும் தொலைநோக்கு பார்வையை உள்ளடக்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை மறுதினம் 2ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவினால் நாட்டிற்கு முன்வைக்கப்பட்ட விஞ்ஞாபனத்தின் அசல் வடிவம் நேற்று (30) பிற்பகல் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

ஒரு போராளியின் இதயத் துடிப்பை அறியும் அரசியல் சக்தியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நாட்டின் அபிவிருத்தி மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் அதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளை தனது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியுள்ளது.

தற்போதுள்ள சவால்களுக்கு எதிராக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் அந்த திட்டங்கள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படுமென பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

The post தேர்தல் விஞ்ஞாபனம் 2ஆம் திகதி வெளியீடு appeared first on Tamilwin news.

Exit mobile version