ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தான்.
இந்த சீசனுக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக வருவார்கள் என மீடியாக்கள், தங்களுடைய யூகங்களுக்கு ஏற்றவாறு பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இருக்கும் போட்டியாளர்களை பார்ப்பதற்கும் கொஞ்சம் ஆர்வமாகத்தான் இருக்கிறது.
நாளை பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இன்று புரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. உலகநாயகன் கமலஹாசனின் ஸ்டைலிஷ் தோற்றத்துடன் விக்ரம் படத்தின் நாயகன் மீண்டும் வரான் பாட்டுடன் இந்த ப்ரோமோ பட்டையை கிளப்பி விட்டது. தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பைனல் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட நடிகர் பிரித்விராஜ் என்னும் பப்லு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். 90களில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த விசித்ராவுக்கு சமீபத்தில் விஜய் டிவி குக் வித் கோமாளியில் பங்கேற்கும் வாய்ப்பை கொடுத்தது. அடுத்து பிக் பாஸ் சீசன் 7லும் வாய்ப்பு கொடுத்திருக்கிறது.
விஜய் டிவியில் செந்தூரப்பூவே தொடரில் வில்லியாக நடித்து, பின் குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட தர்ஷா குப்தா இந்த சீசனில் இருக்கிறார். அதேபோன்று பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினோஷா தேவி மற்றும் மாடல் நடிகை அனன்யா ராவ், பாடகர் யுகேந்திரன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். யுகேந்திரன் மறைந்த பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் ஆவார்.
பிக் பாஸ் வீடு என்றால் கண்டிப்பாக பஞ்சாயத்து இருக்க வேண்டும் என்பதற்காகவே வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிக்காவை களம் இறக்குகிறார்கள். ராட்சசன் படத்தில் நடித்து, மௌன ராகம் 2 சீரியலில் பெயர் வாங்கிய ரவீனா, ராஜா ராணி 2 தொடரில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த விஜே அர்ச்சனா போன்றவர்கள் இந்த ஏழாவது சீசனில் இருக்கிறார்கள்.
மேலும் நடன கலைஞர் விஜய் வர்மா, நடிகை உமாரியாஸ், சுழல் என்னும் வெப் சீரிஸில் நடித்த ஜான்சன், காமெடி நடிகர் பால சரவணன் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இவ்வளவு நாள் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன் கதிர் இந்த சீசனில் கலந்து கொள்வார் என்று சொல்லப்பட்ட நிலையில் உண்மையில் வீட்டுக்குள் நுழைய இருப்பது கண்ணன் கேரக்டரில் நடிக்கும் சரவண விக்ரம் தான். மேலும் ஆபிஸ் தொடரில் நடித்த விஷ்ணு, நடிகர் சத்யா மற்றும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ஆகியோர் இந்த சீசனில் இருக்கிறார்கள்.