Home இலங்கை செய்திகள் பொதுத் தேர்தல்: செப். 30 முதல் தபால் வாக்களிப்பு விண்ணப்பம்

பொதுத் தேர்தல்: செப். 30 முதல் தபால் வாக்களிப்பு விண்ணப்பம்

– 1,714,354 வாக்காளர்கள் நவம்பர் 14 அன்று வாக்களிக்கத் தகுதி

ஜனாதிபதித் தேர்தலின்போது தபால் மூல விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த அனைவரும் இந்தத் தேர்தலுக்காக மீண்டும் தபால் மூல விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தேவையற்றது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (26) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் செப்டம்பர் 30ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தலிலும் 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் பயன்படுத்தப்படவுள்ளதால், ஜனாதிபதித் தேர்தலின்போது தபால் மூல விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த அனைவரும் இந்தத் தேர்தலுக்காக மீண்டும் தபால் மூல விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தேவையற்றது என அவர் விளக்கமளித்துள்ளார்.

ஆனால் கடந்த முறை தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பாராளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகள் அப்படியே செல்லுபடியாகும்.

2024 வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய 1,714,354 வாக்காளர்கள் நவம்பர் 14 அன்று வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

The post பொதுத் தேர்தல்: செப். 30 முதல் தபால் வாக்களிப்பு விண்ணப்பம் appeared first on Tamilwin news.

Exit mobile version