Home இலங்கை செய்திகள் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு வடக்கு முன்னாள் ஆளுநர் கோரிக்கை

பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு வடக்கு முன்னாள் ஆளுநர் கோரிக்கை

தேவையற்ற வதந்திகளை பகிராது இந் நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டுமென, வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக செயற்பட்டு வந்த பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேற்று (24) அவரது பதிவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில், பி.எஸ்.எம். சார்ள்ஸின் நிழற்படத்தை முன்னிலைப்படுத்தி, சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பல்வேறு வதந்திகள் பகிரப்படுகின்றன.

அந்த செய்தியில், முன்னாள் ஆளுநர் ஒருவர் வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்து, விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமூக ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் தகவல்களை பகிரும்போது, செய்திக்கு பொருத்தமான நிழற்படங்களை பகிரவும், தேவையற்ற வதந்திகளை பகிராது இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு வடக்கு முன்னாள் ஆளுநர் கோரிக்கை appeared first on Tamilwin news.

Exit mobile version