Home இலங்கை செய்திகள் மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மாணவனுக்கு சர்வதேச கலாம் தங்க விருது

மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மாணவனுக்கு சர்வதேச கலாம் தங்க விருது

மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மாணவன் அன்வர் அப்னானுக்கு சர்வதேச கலாம் தங்க விருது Kalam Book of Records கிடைத்துள்ளது.

சென்னை ‘சர்வதேச கலாம் உலக சாதனை விருது’ விழாவில் தனது கண்டுபிடிப்புக்களுக்காக கெளரவ விருதினைப் பெற்றுக்கொண்டார். அன்வர் அப்னான் தனது அபாரத்திறமையினால் பல்வேறு கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டுள்ளதுடன், இவ்விருது அவரது கண்டுபிடிப்புக்களுக்கான சர்வதேச அங்கீகாரமாகும்.

பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இளம் வயதில் பல கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்.பொருளாதார ரீதியாக உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் மேலும் பல கண்டுபிடிப்புக்களை இவர் மேற்கொள்வார் என்பது உறுதி.

Exit mobile version