Home இலங்கை செய்திகள் முல்லைத்தீவு மாவட்ட பிரதேச அபிவிருத்த குழு கூட்டம்..!{படங்கள்}

முல்லைத்தீவு மாவட்ட பிரதேச அபிவிருத்த குழு கூட்டம்..!{படங்கள்}

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (15.02.2024) பிற்பகல் 3.30 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் புதுக்குடியிருப்பு பிரதேச  செயலாளர் சி.ஜெயகாந்  பாராளுமன்ற உறுப்பினர்களது பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள்,  கிராம சேவையாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலை, நெல் அழிவுக்கான நட்ட ஈடு, யானை வேலி அமைத்தல், வீதி வேலைகள் , கல்வி சுகாதாரம்  போன்ற பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்ததுடன்

விரிவாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக அபிவிருத்தி குழு தலைவரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்ட பிரதேச அபிவிருத்த குழு கூட்டம்..!{படங்கள்}-oneindia news

Exit mobile version