10 நிமிடத்துக்கு ரூ.2,000; பாடசாலை மாணவர்கள் முண்டியடிப்பு: இளம் பெண் கைது!

சமூக ஊடகங்கள் வழியாக கட்டண அடிப்படையில் தனது நிர்வாணத்தை காண்பித்து வந்த இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மஹரகம, பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்து நிமிடம் நிர்வாணத்தை காண்பிக்க 2000 ரூபாயும், ஒரு மணி நேரத்திற்கு 8000 ரூபாயும் அறவிட்டுள்ளார். அதே போல் இந்த நேரத்தில், தனது முகத்தை காண்பித்து நிர்வாணமாக தோன்ற இருமடங்கு பணம் வசூலித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்ணின் நிர்வாணத்தை இணையத்தில் பார்த்தவர்களில் பெரும்பாலோர் பாடசாலை மாணவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இவரது நிர்வாணத்தை பார்த்த மாணவர்கள் வழியாக தகவல் பரவி, குறிப்பிட்ட பிரதேசங்களில் மாணவர்கள் மத்தியில் இந்த பெண் பிரபலமடைந்துள்ளார். சமூக ஊடகங்கள் வழியாக அவரிடம் பணம் செலுத்தி, நிர்வாண காட்சியை பார்க்க மாணவர்கள் முண்டியத்துள்ளனர்.

இந்த பெண்ணின் நிர்வாணத்தை பார்க்க, மேலதிக வகுப்புகளுக்கு பெற்றோர் கொடுத்த பணத்தை செலவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் கிரிப்டோ கரன்சி பரிமாற்றத்தின் கீழ் பணத்தை பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இணையத்தில் நிர்வாணத்தை காட்டி பணம் சம்பாதித்த மூன்று பெண்கள் கடந்த மூன்று வாரங்களில் கணினி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here