Home கிளிநொச்சி செய்திகள் 11 வயது சிறுவனின் நாடளாவிய ரீதியாக நடைபயணம்

11 வயது சிறுவனின் நாடளாவிய ரீதியாக நடைபயணம்

சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில், கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவன், நாடளாவிய ரீதியாக நடைபயணமொன்றை ஆரம்பித்துள்ளார்.

கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் டியோஜன் எனும் 11 வயதுடைய மாணவன் முழு நாட்டையும் சுற்றி நடை பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார்.

சிறுவயதில் ஏதாவது ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் இந்த பயணத்தை இவர் ஆரம்பித்துள்ளார் என்று குறித்த மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக சமய நிகழ்வுகளுடன் முல்லைத்தீவு நோக்கி குறித்த மாணவன் தனது சாதனை பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்த பயணத்தை குடும்ப உறுப்பினர்களும், சமயத்தலைவர்களும், பிரதேச மக்களும் இணைந்து ஆரம்பித்து வைத்து மாணவனுக்கு உற்சாகமளித்துள்ளனர்.

11 வயது சிறுவனின் நாடளாவிய ரீதியாக நடைபயணம்-TAMILWIN NEWS

Exit mobile version