12 வயது மாணவன் சிகிச்சை பலனின்றி பலி!! பிரேத பரிசோதனையில் பாம்பு கடித்தமை உறுதி

சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை விஷ்னு வித்தியாலயத்தில் எட்டாமாண்டில் கல்வி பயிலும் மாணவன் கந்தசாமி டிலக்ஷன் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.

பாடசாலை விடுமுறை நாட்களில் தனது பெரியப்பாவின் சந்தனமடு ஆறு பிரதேசத்திலுள்ள தோட்டத்துக்கு சென்று தங்கி நின்று வீடு திரும்பும் இவர், கடந்த 30.09.2023ம் திகதி சனிக்கிழமையன்று பெரியப்பாவுடன் சந்தனமடு ஆறு தோட்டத்துக்கு சென்றுள்ளார் , ஞாயிறன்று கடுமையான மழை பெய்ததால் வீடு திரும்ப முடியாமல் அங்கேயே தங்கியுள்ளார்.

திங்கள் (02/10) இரவு 09.00 மணியளவில் தோட்டவாடியில் உறங்கிக்கொண்டிருந்த இவருக்கு திடீரென வயிற்று நோவுடன் வாந்தியும் ஏற்பட மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு பெரியப்பாவின் மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்று அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு MICU பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (03/10) மாலை 03.40 மணிக்கு மரணித்துள்ளார்.

பெற்றோர் திடீர் மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளின் பேரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, மாணவனின் வலது காலின் மேல் பாகத்தில் பாம்பு தீண்டியதால் குருதியோட்டத்தில் நஞ்சு கலந்து இதயம் செயலிழந்து மரணித்திருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் சடலம் மாணவனின் பெற்றோரிடம் நல்லடக்கத்திற்காக ஒப்பபடைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here