1200 மாத்திரைகளுடன் இருவர் கைது

கடற்படை மற்றும் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் 02 சந்தேகநபர்கள் (ஆண் மற்றும் பெண்) 1200 Pregabalin மாத்திரைகளை விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த  நிலையில் சிலாவத்துறை நானாட்டன் பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
 நேற்றுமுன்தினம் 07.02.2024 சிலாவத்துறை நானாட்டான் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பை கடற்படையினர் மேற்கொண்டனர்
இந்த சுற்றிவளைப்பின் போது  நானாட்டான் பகுதியில் சந்தேகத்தின் பேரில் 02 நபர்களை சோதனையிட்டதுடன்  சந்தேகநபர்கள் வசம் இருந்த 1200 Pregabalin மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன.
1200 மாத்திரைகளுடன் இருவர் கைது-oneindia news

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 45 வயதுடைய நானாட்டானைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள், Pregabalin மாத்திரைகளுடன், சிலாவத்துறை பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்