Home இந்திய செய்திகள் 16 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த 3 பிள்ளைகளின் தாய்..!

16 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த 3 பிள்ளைகளின் தாய்..!

சென்னையில் 3 குழந்தைகளின் தாய் 16 வயது சிறுவனுடன் கள்ளக்காதல் ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியைச் சேர்ந்த 40 வயது பெண் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகன் உள்ளார்.

இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் மாலா(28) என்ற பெண்ணுடன் அந்த சிறுவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஆனால், மாலாவுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன.

இவர்கள் கள்ளத்தொடர்பு விவகாரம் நாளடைவில் சிறுவனின் தயாராருக்கு தெரியவந்ததை அடுத்து இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மாலா வீட்டுக்கு சென்ற சிறுவன் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய் ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் மாலா காஞ்சிபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் சிறுவனுடன் இருப்பது தெரியவந்ததை அடுத்து அவரை மீட்டனர். பின்னர் மாலாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Exit mobile version