700 ஆண்டுகள் பழமையான முட்டையில் மஞ்சள் கரு-வியப்பில் மூழ்கிய ஆய்வாளர்கள்..!

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட கருவிகள், அன்றைய காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் போன்றவற்றைக் கண்டறிய அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மூலம் அவர்கள் பழங்காலத்தின் பெருமையை கண்முன் கொண்டு வருவது மட்டுமின்றி பல அறியப்படாத அற்புதங்களையும் கண்டு பிடிக்கின்றனர்.

அப்படி அற்புதமான ஒன்றை கண்டுபிடித்துள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

பொதுவாக எந்த முட்டையையும் சில நாட்கள் மட்டுமே பழுதடையாமல் சேமிக்க முடியும். பின்னர் சிதைந்து போகும் அல்லது கெட்டுப்போய்விடும்.

ஆனால் அண்மையில் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட முட்டை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பண்டைய ரோமானியர்களின் பெருமை

700 ஆண்டுகள் பழமையான முட்டையில் மஞ்சள் கரு-வியப்பில் மூழ்கிய ஆய்வாளர்கள்..!-oneindia news

An ancient egg

2007 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தின் அய்ல்ஸ்பரியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் ஆயிரத்து 700 ஆண்டுகள் பழமையான ரோமானிய கோழி முட்டையை விஞ்ஞானிகள் கண்டறிந்து கண்டுபிடித்துள்ளனர்.

தோண்டப்பட்ட பகுதிகளில் மேலும் மூன்று கோழி முட்டைகள் இருந்தபோதிலும், அவை உடைத்து வெளியே எடுக்கும்போது துர்நாற்றம் வீசியது. ஆனால் விஞ்ஞானிகள் கவனமாக ஒரு முட்டையை பிரித்தெடுத்தனர்.

தண்ணீர் நிரம்பிய குழியிலிருந்து அவர்கள் இந்த முட்டையை வெளியே எடுத்துள்ளனர். இது பண்டைய ரோமானியர்களின் பெருமையை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட முட்டை மைக்ரோ ஸ்கேன் மூலம் பரிசோதித்தபோது, ​​மஞ்சள் கருவும் வெள்ளை கருவும் அப்படியே இருப்பது தெரியவந்தது.

அந்த முட்டை பல நூறு ஆண்டுகளாக அப்படியே இருந்ததால் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் மிகவும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

முட்டைகளை கெடாமல் பாதுகாக்க பண்டைய ரோமானியர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

முட்டைக்குள் எதுவும் இருக்காது என நினைத்தோம்

700 ஆண்டுகள் பழமையான முட்டையில் மஞ்சள் கரு-வியப்பில் மூழ்கிய ஆய்வாளர்கள்..!-oneindia news

An ancient egg

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் சிரேஷ்ட திட்ட முகாமையாளர் எட்வர்ட் பிடுல்ப்,அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தோம்,

எதிர்பாராத விடயங்களை கண்டுபிடித்தது மட்டுமல்லாமல், அந்த முட்டை அப்படியே இருந்ததும் ஆச்சரியமாக இருந்தது எனக்கூறியுள்ளார்.

உண்மையில் அந்த முட்டைக்குள் எதுவும் இருக்காது என நினைத்தோம்.

ஆனால் ஸ்கேனில் மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கருவை பார்த்தது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது.

அதனை லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்வதாகவும் முட்டையை கெடாமல் பாதுகாக்கும் முறைகள் குறித்து அருங்காட்சியக பறவைகள் பாதுகாப்பு ஆர்வலர்களை தொடர்பு கொண்டு பேசியதாகவும் எட்வர்ட் குறிப்பிட்டுள்ளார்.