8000 பேருக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு – வெளியானது அறிவிப்பு

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக பட்டதாரி ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மாகாண சபைகளுக்கு இணைத்துக் கொள்வதற்கான அதிகாரம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here