இலங்கையில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட 4 கிலோ 500 கிராம் அம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தியை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முயன்ற மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய, தெவிநுவர மற்றும் நகுலுகமுவ பிரதேசத்தில் வைத்து மிரிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொண்டேரோ ரக ஜீப் வண்டியில் பயணித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சந்தேகநபர்கள் 25-30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.