மாந்தை கிழக்கில் காணாமல் போன இளைஞனின் தொலைபேசி மீட்பு..!
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தைகிழக்கு பகுதியில் கடந்த 05.11.2023 அன்று தனது மகனை காணவில்லை என தந்தை ஒருவரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது குறித்த முறைப்பாட்டில் ரவிச்சந்திரன் கேமாரஞ்சன் (24) எனும் எனது மகனை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது குறித்த முறைப்பட்டிற்கமைய பொலிசார் தேடிதல் நடவடிக்கையை முடக்கி விட்டிருந்த சந்தர்ப்பத்தில் , காணாமல் போன இளைஞரால் பாவிக்கப்பட்டதென நம்பப்படும் துவிச்சக்கரவண்டி முறைப்பாடு பதிவு செய்யப்படிருந்த பின் ஒரு சில நாட்களில் கண்டெடுக்கப்பட்டதுடன் விசாரணைகளும் […]
மாந்தை கிழக்கில் காணாமல் போன இளைஞனின் தொலைபேசி மீட்பு..!
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தைகிழக்கு பகுதியில் கடந்த 05.11.2023 அன்று தனது மகனை காணவில்லை என தந்தை ஒருவரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்ததுகுறித்த முறைப்பாட்டில் ரவிச்சந்திரன் கேமாரஞ்சன் (24) எனும் எனது மகனை...
மாங்குளத்தில் வீதியில் இடம் பெற்ற கொடூர கொலை..!
முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு தச்சடம்பன் பகுதியில் கத்தி குத்திற்கு இலக்கான இளைஞன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (24)அதிகாலை இடம்பெற்றுள்ளது. வீதியால் பயணித்த இளைஞனை வளிமறித்த மற்றும் ஒரு இளைஞன் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் மாங்குளம் ஆதார மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார். 27 அகவையுடைய விஜயராசா சோபிதன் என்ற இளைஞனே இ;வாறு உயிரிழந்துள்ளார் இவரது உடம் மாங்குளம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவிலும் போராட்டம்..!{படங்கள்}
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுண்ணாம்புசூளை வீதி திருத்தப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை மக்கள் விருப்பத்துக்கு மாறாக மாற்றியதை எதிர்த்து மக்கள் இன்று (19) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திககாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 115 மில்லியன் நிதியில் 22.5 மில்லியன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு ஒதுக்கப்பட்டது இந்நிலையில் குறித்த நிதியினை என்னென்ன தேவைக்கு பயன்படுத்துவது என கிராமங்களில் மக்கள் பொது […]
அனுமதியற்று மணலேற்றிய வாகனம் பறிமுதல்.!
அனுமதிப் பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிசென்ற குற்றத்திற்காக டிப்பர் வாகனத்தையும், அதன் சாரதியையும் கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிசார் டிப்பர் வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போதே அனுமதி பத்திரமின்றி கிரவல் மணல் ஏற்றி சென்றமை தெரியவந்துள்ளது. இரண்டு டிப்பர் வாகனத்தினதும் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், டிப்பர் வானத்தினையும் பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களையும், […]
இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு. !
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்று (10.02.2024) காலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும் குறித்த பெண், குழந்தை ஒன்றை பிரசவித்த நிலையில் கடந்த 11 நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீடு திரும்பிய அவர் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளை நள்ளிரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். […]
மாங்குளம் அம்புலன்ஸ் சேவை மூன்று மாதமாக இடைநிறுத்தம்.!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை(1990) கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் குறித்த அவசர அம்புலன்ஸ் (1990) வண்டியானது பிரதானமாக ஏ 9 வீதியில் இடம்பெறும் விபத்துகளின் போதும் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், மல்லாவி,கோட்டைகட்டிய குளம், அம்பலப்பெருமாள் மற்றும் அம்பகாமம் தச்சடம்பன், ஒலுமடு உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களும் […]
இலங்கையின் சுதந்திரநாள் தமிழர் தேசத்தின் கரிநாள்- முல்லையில் முன்னணி ஆர்ப்பாட்டம்.!
இலங்கையின் சுதந்திரநாளை தமிழர்தேசத்தின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, ஏழு முக்கிய விடயங்களை முன்வைத்து பெப்ரவரி (04) இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.இவ்வார்ப்பாட்டமானது...
முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று 25.01.2024 இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரவ பட்டாவாகனமும் மோதி...
ஊஞ்சல் கயிறு இறுக்கி பத்து வயதுச் சிறுவன் பலி
முல்லைத்தீவு - செம்மலை பகுதியில் ஊஞ்சல் ஆடிய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.முல்லைத்தீவு செம்மலை பகுதியில் இன்று (20.01.2024) மாலை 4.30 மணியளவில் வீட்டில் ஊஞ்சல் ஆடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில்...