அதி நவீன துப்பாக்கியா-மிரண்டு போன பொலிசார்..!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன மைக்ரோ ரக கைத்துப்பாக்கியுடன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர் .

ருவான்வெல்ல, கொட்டியாகும்புர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இவரிடமிருந்து மைக்ரோ ரக கைத் துப்பாக்கி மற்றும் துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.