இலங்கை நாட்டின் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் 56 ஆவது பிறந்த தினத்தை இன்று (24) திருகோணமலையை சேர்ந்த தமிழ்க் குடும்பமொன்று கொண்டாடியுள்ளது.
திருகோணமலை -கண்டி வீதி அனுராதபுரம் சந்தியில் குறித்த பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றது.
திருகோணமலை-அன்புவளிபுரம் பகுதியில் வசித்து வரும் குணபாலன் கிறிஸ்டியன் என்பவர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வின் உருவப் படத்தை வரைந்து அவரும் அவரது குடும்ப அங்கத்தவர்களும் கூட்டாக இணைந்து கேக் செய்து பொது நிகழ்வாக தமது சொந்த செலவில் ஜனாதிபதியினுடைய பிறந்த தினத்தை உத்தியோகபூர்வமாக கொண்டாடினர்.
எதிர்கால சந்ததியினருக்கு நல்ல தலைவர் ஒருவரை நியமித்திருக்கின்றோம். இனமத வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் நாங்கள் வாக்களித்தோம். அவர் எங்களுடைய பொன்னான வாக்குகளை பெற்று நாட்டின் ஜனாதிபதியானார்.
இவரின் பிறந்த தினத்தை எங்களது குடும்ப அங்கத்தவரை போன்று நினைத்து கொண்டாடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.