துப்பாக்கி வேட்டுக்களால் அதிரும் கொழும்பு-குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி..!

கொழும்பில் முகத்துவாரம் பொலிஸ் பிரிவில் முகத்துவாரம் வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

முகத்துவாரம் வீதி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றி வரும் குறித்த நபர், நேற்று இரவு அந்த உணவகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த போது காரில் வந்த இனந்தெரியாதோரால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த கொழும்பு -14 மஹவத்தை பகுதியை சேர்ந்த 51 வயதான நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.