அகற்றப்பட்ட சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு

Table of Contents

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் கை மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதன் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கடந்த வழக்குத் தவணையின்போது நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது.

விசாரணைகள் இன்னமும் முடிவடையாத நிலையில், விசாரணைகளுக்கு இன்னமும் 10 நாள்கள் தேவை என்று நேற்றைய வழக்கு விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம், சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி பரிசோதனைகளை மேற்கொள்ளவும், கை அகற்றப்பட்டமைக்கான காரணத்தைக் கண்டறியவும் நீதிமன்று உத்தரவிட்டது.

அகற்றப்பட்ட சிறுமியின் கை கொழும்புக்கு - நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு - Dinamani news - அகற்றப்பட்ட,  அகற்றப்பட்ட சிறுமியின்,  அகற்றப்பட்ட சிறுமியின் கை,  அகற்றப்பட்ட சிறுமியின் கை கொழும்புக்கு

சிறுமியின் கை பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனையில் பொலிஸார் ஊடாகக் கையளிக்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக் குழு அறிக்கையை முழுமைப்படுத்திச் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டது.

சிறுமியின் சார்பாக சட்டத்ததரணிகளான சர்மினி விக்னேஸ்ரன் மற்றும் லக்சன் செல்வராஜா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

பின்னணி

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடதுகையின் மணிக்கட்டுக்கு கீழ் துண்டிக்கப்பட்டது.

சிறுமியின் கை துண்டிக்கப்பட்டமைக்கு விடுதியில் கடமையில் இருந்தவர்களின் அலட்சியமும், தவறுமே காரணம் என்று சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட கனுலா தவறாக பொருத்தப்பட்டமையால் சிறுமியின் கையில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு கையைத் துண்டிக்க வேண்டி ஏற்பட்டது என்றும் கூறப்படுகின்றது.

அகற்றப்பட்ட சிறுமியின் கை கொழும்புக்கு - நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு - Dinamani news - அகற்றப்பட்ட,  அகற்றப்பட்ட சிறுமியின்,  அகற்றப்பட்ட சிறுமியின் கை,  அகற்றப்பட்ட சிறுமியின் கை கொழும்புக்கு

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெற்றோரின் முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரால் அந்த விடுதியில் கடமையில் இருந்தவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தன.

அங்கு கடமையில் இருந்த தாதி ஒருவருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று கடந்த வழக்குத் தவணையின்போது பயணத் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை கீழே கொமன்ஸ் பகுதியில் பதிவிடவும்.

தொடர்புடைய செய்திகள்:-

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்! சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு
அகற்றபட்ட சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு
சிறுமியின் கை அகற்ற பட்ட விவகாரம் தாதிய உத்தியோகத்தரின் தன்னிலை விளக்கம்
சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – கொழும்பிலிருந்து யாழ்.வரும் விசேட குழு..!
மருத்துவ தவறுகள் தவிர்க்கப்பட வேண்டியவை!! வைரலாகும் தாதி ஒருவரின் பதிவு
யாழ் வைத்தியசாலையில் தாதியர் காவலாளிகள் அடாவடி..!
யாழ்.போதனா வைத்தியசாலையால் கையை இழந்த சிறுமி; போராட்டத்தில் பதற்ற நிலை
சிறுமியின் கை அகற்றபட்ட சர்ச்சைக்குரிய சம்பவம் – மூடி மறைக்க முயற்சியா? வெடித்தது போராட்டம்
சாண்டில்யன் வைசாலியின் கை அகற்றப்பட்டமை!! தவறான இடத்தில் கனுலா!! தவறான முறையில் செலுத்தப்பட்ட ஊசி மருந்து!! விசாரணைக்கு அனுப்பிய தாயின் வாக்குமுலம் வெளியானது
தாதியரின் அசண்டையீனமே காரணம்!! சிறுமியின் தாத்தா குற்றச்சாட்டு
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம்!! நடந்தது என்ன?
யாழ் போதனாவில் சிகிச்சையில் அசமந்தம்! காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு சரியான முறையில் ஊசி மருந்து செலுத்தாததால் மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது கை