இந்தியாவின் அண்டை நாடான வங்க தேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. அவரது ஆட்சியில் விடுதலை வீரா்களின் வாரிசுகளுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மாணவா் அமைப்பினா் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது.
அப்போது போராட்டக்காரா்கள் பிரதமா் ஷேக் ஹசீனா இல்லத்தை முற்றுகையிடுவதற்கு சென்றனா். இதனால் வன்முறையில் தீவிரத்தை அறிந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராணுவ விமானத்தில் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
அவா் தற்போது இந்தியாவில் தான் உள்ளார். அவரை தப்பி சென்றதை தொடா்ந்து அந்நாட்டு பேராசிரியா் முகமது யுனுஷ் என்பவரது தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. அதற்கு வங்கதேசத்து ராணுவம் முழு ஆதரவு அளித்தது. இதையடுத்து வங்கதேசத்தில் அமைதியை நிலைநிறுத்தும் நடவடிக்கையில் முகமது யுனுஷ் ஈடுபட்டு வருகிறார். இந்தியாவில் வசித்து வரும் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதற்கு தேவையான பணிகளை வங்கதேசத்து அரசு மேற்கொண்டு வருகிறது.
ஷேக் ஹசீனா விஷயத்தில் வங்க தேசத்திற்கும், இந்தியாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை, வங்கதேசத்து இடைக்கால அரசு சார்பில் முகமது யனுஷ் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷா, அண்மையில் பேசுகையில், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சிலர் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். அவர்களை இழிவாக பேசி இருந்தனர். இதற்கு வங்க தேசத்து இடைக்கால அரசு கண்டனத்தை தெரிவித்துள்ளது.
அமித்ஷாவை கண்டிக்க மோடிக்கு முகமது யுனுஷ் வலியுறுத்தல்
மேலும் டாக்காவில் உள்ள இந்தியாவின் தூதரகத்தில் கடிதம் ஒன்றை வங்கதேச அரசு சமர்பித்தது. மேலும் அமித்ஷாவை கண்டித்து வைத்து கொள்ளும்படி பிரதமர் மோடிக்கு முகமது யுனுஷ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமித்ஷாவின் பேச்சு தங்களை வேதனை படுத்திவிட்டதாக முகமது யுனுஷ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஏற்கனவே ஷேக் ஹசீனா விவகாரத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அமித்ஷாவின் பேச்சு தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.