Home jaffna news அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம் – வட்டுக்கோட்டையில் சம்பவம்…!{படங்கள்}

அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம் – வட்டுக்கோட்டையில் சம்பவம்…!{படங்கள்}

இன்று மாலை, அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றவேளை வீட்டின் வாசலில் அவர் உயிரிழந்துள்ளார்.

அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம் - வட்டுக்கோட்டையில் சம்பவம்...!{படங்கள்}-oneindia news

வட்டுக்கோட்டை – தொல்புரம் கிழக்கு, சுழிபுரம், சிவபூமியடி பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் செல்வநிதி (வயது 49) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் அவரது அயல்வீட்டுக்காரருடன் பேசுவதில்லை. இந்நிலையில் இன்றையதினம் அவரது வீட்டில் இருந்து சுமார் 30 மீட்டர்கள் தூரத்தில் உள்ள அயல்வீட்டுக்கு சென்று தண்ணீர் தருமாறு கேட்டு வாங்கி குடித்துவிட்டு தனது வீட்டுக்கு செல்வதற்கு வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் வீதியில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை தூக்கி அவரது வீட்டுக்கு கொண்டு செல்லும்போது குறித்த பெண் உயிரிழந்துள்ளார். இது குறித்து உயிரிழந்த பெண்ணின் கணவன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, கணவர் அவரை தாக்குவதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் தாயார் வழமையாக பாவிக்கும் மாத்திரைகளை விழுங்கிவிட்டு அயல்வீட்டுக்கு சென்றதாக அவரது மகள் தெரிவிக்கின்றார்.

இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்ற விபரங்கள் வெளியாகவில்லை. வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலமானது உடற்கூற்று பரிசேதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

Exit mobile version