அவுஸ்ரேலியாவில் உயிரிழந்த கணவர்-சாட்சியங்களை சமர்ப்பித்த மனைவி..!

 

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்து நாட்களுக்குள் மூன்று தடவை ரோயல் அடிலெய்ட் வைத்தியசாலையின் (RAH) உதவியை நாடிய இலங்கையர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தோற்று பரவலின் போது ரோயல் அடிலெய்ட் வைத்தியசாலையின் உதவியை 23 வயதுடைய இலங்கை பிரஜையான சசிந்தா பட்டகொடகே எனும் இளைஞர் கோரியுள்ளார்.

குறித்த இளைஞர் இறப்பதற்கு முன்னதாக இருமல் மற்றும் இரத்த வாந்தி எடுத்துள்ளதாக வைத்தியர்களிடம் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

2020 ஆம் ஆண்டி இந்த இளைஞர் அவரது மனைவியுடன் அவுஸ்திரேலியாவின் அடிலெயிட் நகரில் குடியேறியுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த பெண் தமது கணவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், அவர் அதிக இரத்தத்தை இழந்துள்ளதாகவும் தாதியர்களிடம் கூறிய நிலையில், அவரது வேண்டுகோள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, வைத்தியசாலையில் இடம்பெற்ற அனைத்து விடயங்களையும் புகைப்படம் எடுத்ததாக, மொழிபெயர்ப்பாளர் மூலம் சாட்சியங்களை வழங்கிய சசிந்தா பட்டகொடகேவின் மனைவி தெரிவித்துள்ளார்.