அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி-7000 பேருக்கு நேர்ந்த கதி..!

அஸ்வெசும கொடுப்பனவை பொய்யான தகவல்களின் மூலம் பெற்ற சுமார் 7,000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டின் ஜூலை மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வந்த அஸ்வெசும திட்டம் நான்கு கட்டங்களாக செயற்படுத்தப்படுகின்றது.

இவற்றில் குறைந்த வருமானம் பெறுவோர், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் போலியான தகவல்களை வழங்கி நிவாரணம் பெற்று வந்த ஏழாயிரம் ​பேர் தற்போதைக்கு அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.