அஸ்வெசும விண்ணப்ப படிவம்-300 ரூபாவா-மலையகத்தில் கொந்தளிக்கும் மக்கள்..!

மக்கள் குற்றச்சாட்டு

அஸ்வெஸ்ம நலன் புரி  சம்பந்தமான இரண்டாம் கட்ட  விண்ணப்பம் கோரல் கடந்த 15 ம் திகதி முதல் நாடு முழுவதும் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்ற நிலையில்  குறித்த விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்வதற்கு சில குள்ள நரிகள் முன்னூறு ரூபாய் பணம் பொது மக்களிடமிருந்து வசூல் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்த ஒருவர் கூறுகையில் குறித்த  நபர்கள்  அஸ்வெஸ்ம விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கு தாங்களே பொறுப்பு தாரிகள் எனவும் சுயமாக பூர்த்தி செய்யப்படும் விண்ணப்ப படிவங்கள்  பொறுப்பான அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது எனவும் கூறி பொது மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்து வருவதாகவும்   புகார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் மஸ்கெலியா மற்றும் சாமிமலை பகுதியில்  கூடுதலாக காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மஸ்கெலியா நகரில் உள்ள மனித நேயம் உள்ள தொடர்பாடல் நிலையங்களில் 10/-ரூபா விற்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதனை பெற்று தமக்கு தெரிந்த மொழியில் பூர்த்தி செய்து  தமது பிரிவிற்கு பொறுப்பான கிராம சேவை அதிகாரிகளிடம் சுயமாக கையளித்தாலே  போதுமான விடயம் .

இவ்வாறான செயற்பாடுகளில் மக்களை ஏமாற்றும் பேர் வழிகளை இனம் கண்டு நடவடிக்கை எடுக்க பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கிறனர்.