ஆடி அடங்கிய மரக்கறிகள் இன்று பெரும் வீழ்ச்சி..!

மரக்கறிகளின் விலை இன்று (27) வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  தம்புள்ளை விசேட பொருளாதார நிலையத்தில் இன்று (27) ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை 310 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் கோவாவின் விலை 350 ரூபாயாகவும், போஞ்சி 450 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன்  ஒரு கிலோகிராம் லீக்ஸ் 260 ரூபாயாகவும், தக்காளி 430 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.