இந்த தீபாவளிக்கு சரவெடியாக வெளிவர உள்ள 5 படங்கள்.. யார் பவர்ஃபுல்லுனு நேரடியாக மோதும் தனுஷ்,Sk

எந்த அளவிற்கு தீபாவளியை ஆரவாரமாக கொண்டாடுவதற்கு காத்துக் கொண்டிருக்குமோ, அதுபோலவே அன்றைக்கு முன்னணி நடிகர்களின் படங்களும் ரிலீஸ் ஆகிவிடும். அந்த வகையில் அன்றைக்கு வெளிவரும் படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விடும். அப்படி இந்த வருடம் தீபாவளிக்கு திரையரங்குகளில் மல்லுக்கட்ட போகும் 5 டாப் நடிகர்களின் படங்கள் வர இருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம்.

அயலான்:

இந்த தீபாவளிக்கு சரவெடியாக வெளிவர உள்ள 5 படங்கள்.. யார் பவர்ஃபுல்லுனு நேரடியாக மோதும் தனுஷ்,Sk - Dinamani news - தீபாவளிக்கு, அயலான், ஜப்பான், கேப்டன் மில்லர், லால் சலாம், விடுதலை 2

கிட்டத்தட்ட கொரோனா காலத்துக்கு முன்னதாகவே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. ஆனாலும் சில காரணங்களாக இப்படம் இன்னும் ரிலீசுக்கு வராமல் இருக்கிறது. அந்த வகையில் ஒரு வழியாக தற்போது தீபாவளி அன்று மோதுவதற்கு திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.

இப்படத்தை ரவிக்குமார் இயக்கி, ஆர் டி ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். அத்துடன் இப்படம் முழுக்க முழுக்க ஏலியன்ஸை மையப்படுத்தி வருவதால் குழந்தைகள் முதற்கொண்டும் ஆவலாக இப்படத்தை பார்ப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜப்பான்:

இந்த தீபாவளிக்கு சரவெடியாக வெளிவர உள்ள 5 படங்கள்.. யார் பவர்ஃபுல்லுனு நேரடியாக மோதும் தனுஷ்,Sk - Dinamani news - தீபாவளிக்கு, அயலான், ஜப்பான், கேப்டன் மில்லர், லால் சலாம், விடுதலை 2

இயக்குனர் ராஜமுருகன் இயக்கத்தில் கார்த்தி ஜப்பான் படத்தை நடித்து முடித்து இருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடித்திருக்கிறார். மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அத்துடன் இப்படத்தில் கார்த்திக் வித்தியாசமான தோற்றத்தில் உடம்பு முழுவதும் நகை அணிந்து கொண்டு ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

கேப்டன் மில்லர்:

இந்த தீபாவளிக்கு சரவெடியாக வெளிவர உள்ள 5 படங்கள்.. யார் பவர்ஃபுல்லுனு நேரடியாக மோதும் தனுஷ்,Sk - Dinamani news - தீபாவளிக்கு, அயலான், ஜப்பான், கேப்டன் மில்லர், லால் சலாம், விடுதலை 2

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அதிகமாக எதிர்பார்ப்புகள் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது.

இதில் தனுஷ் நீண்ட தலை முடி, முகத்தில் தாடி என இவருடைய தோற்றத்தை மொத்தமாக மாற்றி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அத்துடன் இந்த தீபாவளி அன்று யார் பவர்ஃபுல் என்று மோதிப் பார்த்திடலாம் என தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் களத்தில் இறங்குகிறார்கள்.

லால் சலாம்:

இந்த தீபாவளிக்கு சரவெடியாக வெளிவர உள்ள 5 படங்கள்.. யார் பவர்ஃபுல்லுனு நேரடியாக மோதும் தனுஷ்,Sk - Dinamani news - தீபாவளிக்கு, அயலான், ஜப்பான், கேப்டன் மில்லர், லால் சலாம், விடுதலை 2

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யலாமா என ஒரு பிளான் பண்ணி வைத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே சமீபத்தில் தான் ரஜினி பிரம்மாண்டமான வெற்றியை ஜெயிலர் படத்தின் மூலம் பார்த்தார். அதனைத் தொடர்ந்து இப்படமும் தீபாவளி அன்று வெளிவந்தால் இந்த வருடம் வசூல் நாயகன் இவராகத்தான் இருப்பார்.

விடுதலை 2:

இந்த தீபாவளிக்கு சரவெடியாக வெளிவர உள்ள 5 படங்கள்.. யார் பவர்ஃபுல்லுனு நேரடியாக மோதும் தனுஷ்,Sk - Dinamani news - தீபாவளிக்கு, அயலான், ஜப்பான், கேப்டன் மில்லர், லால் சலாம், விடுதலை 2

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் இந்த வருடம் வெளியான விடுதலை படம் தாறுமாறான வெற்றியை அடைந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது.

அந்த வகையில் இப்படமும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி மட்டும் இந்த படம் வந்து விட்டால் மற்ற படங்களை விட மிகப்பெரிய வெற்றி அடைந்து விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.