Today Horoscope இன்றைய ராசி பலனை (அக்டோபர் 2, 2024 புதன் கிழமை) இன்று சந்திரன் பகவான் கன்னி ராசியில் உத்திரம், அஸ்தம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று கும்பம் ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.
இன்றைய ராசிபலன் : 02 அக்டோபர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 2.10.2024, குரோதி வருடம் புரட்டாசி 16, புதன் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் உள்ள அவிட்டம், சதயம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் தேவை. இன்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று குடும்பத்துடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று தேவையற்ற பயத்தால் மன அழுத்தம் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று தொழில், வியாபாரம் தொடர்பான விஷயத்தில் அரசாங்கம் தொடர்பான சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று அதிக லாபத்தை பெற வாய்ப்புள்ளது. நிதிநிலை வலுவாக இருக்கும். பங்குச் சந்தை முதலீடு செய்தவர்களுக்குச் சிறப்பான லாபத்தை பெறலாம். ஆன்மீகத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அண்டை வீட்டாருடன் அனுசரித்துச் செல்லவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று புதிய விஷயங்களை செய்ய முயல்வீர்கள். அதே சமயம் பழைய திட்டங்களில் கவனம் தேவை. இன்று சில நற்செய்திகள் உங்களைத் தேடி வரும். உங்கள் வியாபாரத்தில் புதிய தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தவும். இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாகப் பயணம் செய்வீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த துணைக்குப் பரிசு வழங்க நினைப்பீர்கள். வியாபாரத்தில் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருக்கும் கருத்து வேறுபாடு இன்று தீர வாய்ப்புள்ளது. நண்பர்களுடன் மகிழ்ச்சியாக சில விஷயங்களை இணைந்து செய்வீர்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழிலில் புதிய யோசனை செயல்படுத்த முயற்சிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்கள் பேச்சை கட்டுப்படுத்தவும். உங்கள் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சு, செயலில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். நண்பர்கள் மூலம் நன்மைகள் பெறுவீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் பதற்றமும், சில தொந்தரவுகளும் நிறைந்ததாக இருக்கும். இதை செய்யக்கூடிய தொழிலில் நேர்மையாக உழைக்கவும். இன்று ஏழை, எளியவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். முழுமனதுடன் நீங்கள் செய்யக்கூடிய எந்த வேலையிலும் சிறப்பான பலனை பெறுபவர்கள். பிஸியான சூழ்நிலையில் காதலுக்காக நேரத்தை ஒதுக்க முடியும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். உடல் சூடு சார்ந்த பிரச்சினைகள் சந்திக்க நேரிடும். உங்களின் வீட்டு செலவுகள் நினைத்ததை விட அதிகரிக்கும். இன்று பண பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் தேவை. இல்லையெனில் தேவையற்ற நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமைய வேண்டும். மாலை நேரத்தில் மங்கள விழாவில் கலந்து கொள்கிறீர்கள். உங்களுக்கு செல்வாக்கு மிக்க நபரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு தேடி வரும். விருந்து விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் கடனாக எதிர்பார்த்த பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதிநிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று உங்கள் விருப்பங்களை நிறைவேற்றச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பண விஷயத்தில் கவனம் தேவை. இல்லையெனில் தேவையற்ற மரியாதைக் குறைவு ஏற்படும். முக்கிய நபர்களின் உதவியால் பயனடைவீர்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று பிறருக்கு கடன் கொடுக்க நினைத்தால் சிந்தித்து முடிவெடுக்கவும். பணியிடத்தில் உங்களின் நிலை மேம்படும். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். பிள்ளைகளின் கல்விக்காக பயணம் மேற்கொள்ள நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று முக்கிய வீட்டில் குழுவாக செய்யக்கூடிய வேலையில் சிறப்பான பலன் அடைவீர்கள். இன்று பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மாலை நேரத்தை பெற்றவருடன் மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் குறை ஏற்படலாம் கவனம் தேவை.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் எந்த முயற்சி செய்தாலும் அது சரியான நேரத்தில் செய்து முடிக்க முடியும். இன்று நண்பர்களின் உதவி உறுதுணையாக இருக்கும். நண்பர்களுடன் வீண் செலவும் மற்றும் வீணாக நேரத்தை செலவிட வேண்டாம். இன்று குடும்பத்தில் அதிருப்தி ஏற்படும்.வணிகம் சார்ந்த திட்டமிடலில் கூடுதல் கவனம் தேவை.